வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அதிகத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் எந்த ஒரு விடயத்திலும் தனித்து செயல்படவே விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள்.